மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

பாஜக வழியில் அதிமுக நிர்வாகியின் பட விளம்பரம்!

பாஜக வழியில் அதிமுக நிர்வாகியின் பட விளம்பரம்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 1417 ஓட்டுக்களை பெற்றதும், 100 கோடிக்கும் மேல் வசூல் பெற வேண்டிய மெர்சல் திரைப்படத்தை 200 கோடிக்கு உயர்த்திக் கொடுத்ததும் தமிழக பாஜகவின் 2017ஆம் ஆண்டின் சாதனைகள். அவர்களது ரூட்டை அடியொற்றியபடி அதிமுக கட்சியின் நிர்வாகி தற்போது களமிறங்கியிருக்கிறார். இவரது டார்கெட் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’.

தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடல் தான். புதிய கூட்டணி என்று சூர்யா-விக்னேஷ் சிவனை சந்தேகமாகப் பார்த்தவர்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திக்கொடுத்த பாடல் இது எனலாம். சமுதாயத்தின் எல்லா மட்டங்களிலும் நடைபெறும் அநியாயமான ஊழல்களைக் கண்டு ஆதங்கப்படும் ஒரு தனி மனிதனின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் பாடலாக இது அமைந்திருக்கிறது.

‘சொடக்கு மேல’ பாடல் ரிலீஸாகி இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தற்போது அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகியான சதீஷ் குமார் என்பவர் சொடக்கு மேல பாடலில் இடம்பெற்றுள்ள விரட்டி விரட்டி வெளுக்க தோணுது... அதிகார திமிர... பணக்கார பவர... தூக்கி போட்டு மிதிக்க தோணுது என்ற வரிகளுக்கு கண்டனம் தெரிவித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அரசியல்வாதிகளுக்கு எதிராகவும், ஆளும் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் எழுதப்பட்டிருக்கும் இந்தப்பாடலினால் பொதுமக்களிடையே குழப்பம் நிலவுகிறது என்று கூறியிருக்கிறார்.

யூடியூபில் ஒரு கோடியே தொண்ணூற்று நான்கு லட்சம் மக்களால் பார்க்கப்பட்டு, அதில் இரண்டு லட்சத்து அறுபத்து எட்டாயிரம் பேரால் விருப்பம் தெரிவிக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் இந்த வரிகள் பொதுமக்களிடையே எவ்வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியதாக இதுவரை செய்திகள் பதிவாகவில்லை. பொதுவாக அதிகாரத் திமிர் எனக் குறிப்பிட்டிருக்கும் இந்த வரிகள் எந்தக் கட்டமைப்புக்குள் உருவானதையும் நோக்கி கேள்வி எழுப்பலாம் என்றும், தானா சேர்ந்த கூட்டம் படத்தின் விளம்பரத்துக்காக களமிறங்கியிருக்கும் மாநிலக் கட்சியினருக்கு நன்றி என்றும் சூர்யா ரசிகர்கள் கலாய்த்துவருகின்றனர்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வெள்ளி 5 ஜன 2018