குடிமகன்கள் கட்சி!

நடிகர் ரஜினி கட்சி ஆரம்பிக்க உள்ளதை, ‘குடி’மகன்களின் கட்சி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்தும் தான் அரசியலுக்கு வரப்போவது உறுதி என்றும், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் ரசிகர்கள் மத்தியில் அறிவித்துள்ளார். இதற்குப் பல்வேறு தலைவர்களும் விமர்சகர்களும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
லோக் ஆயுக்தா சட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று சென்னையில் நேற்று (ஜனவரி 4) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் லோக் ஆயுக்தா சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது.