மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

பெண்களுக்கு வயது சான்றிதழ் கட்டாயம்!

பெண்களுக்கு வயது சான்றிதழ் கட்டாயம்!

சபரிமலை கோயிலுக்கு வரும் பெண்களுக்கு வயது சான்றிதழ் கட்டாயம் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

மகர விளக்கு பூஜைகளுக்கான சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (டிசம்பர் 30) திறக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு பூஜை ஜனவரி 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காகப் பக்தர்கள் அதிக அளவில் வரத்தொடங்கியுள்ளனர்.

சபரிமலை கோயிலுக்குள் 10 வயது வரையிலான பெண் குழந்தைகளும், மாதவிடாய் முடிந்த 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், “சபரிமலை வரும் பெண்கள் தகுந்த வயது சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்றும், ஆதார அட்டையைக் கூட வயதிற்கான சான்றாக காட்டலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பலர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வருவதாகச் சந்தேகங்கள் எழுந்துள்ளது. எனவே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இதுவரை கோயிலுக்கு செல்லத் தடை செய்யப்பட்ட வயதைச் சேர்ந்த 260 பெண்கள் கோயிலுக்குள் நுழைய முயன்று, தடுக்கப்பட்டதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

2017 நவம்பர் மாதம், மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த பார்வதி(31) என்ற பெண் தனது கணவர், 2 குழந்தைகள் மற்றும் கிராமத்தினர் 11 பேருடன் சபரிமலைக்கு சென்றுள்ளார். வழக்கமாக சபரிமலை செல்வோர் இருமுடி கட்டி, 18ஆம் படி வழியாகவே சன்னதிக்கு செல்வார்கள். ஆனால் பார்வதி இருமுடி ஏதும் இல்லாமல், ஒரு துணியில் தேங்காய், நெய், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களை மூட்டையாகக் கட்டி எடுத்து வந்துள்ளார். அவரது அடையாள அட்டையைப் பார்த்த போலீஸார் அவரைக் கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது எனத் திருப்பி அனுப்பி விட்டனர். தனக்குக் கோயிலின் கட்டுப்பாடுகள் குறித்து தெரியாது என அப்பெண் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, பெண்களின் வருகையைப் பம்பையிலேயே போலீஸார் கண்காணித்தபடி இருக்கின்றனர். மீறி வரும் பெண்களை அவர்கள் திருப்பி அனுப்புகின்றனர்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வெள்ளி 5 ஜன 2018