மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

அம்ருதா வழக்கு : கோர்ட் உத்தரவு!

அம்ருதா வழக்கு : கோர்ட் உத்தரவு!

ஜெயலலிதாவின் மகள் என பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா தொடர்ந்த வழக்கில், வரும் ஜனவரி 25ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 5ஆம் தேதியன்று, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார் என்று அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர், ஜெயலலிதாவின் மகள் நான்தான் என்று கூறி பரபரப்பைக் கிளப்பினார் பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண். இரண்டு மாதங்களுக்கு முன்பு, இந்த விவகாரம் குறித்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அங்கு அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதோடு, உயர் நீதிமன்றத்தில் இதுபற்றி வழக்கு தொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் நான் என்றும், இந்த உண்மையை அறிய டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்துவரும் நீதிபதி வைத்தியநாதன், தமிழக அரசு, தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சி மற்றும் ஜெயலலிதாவின் உறவினர்கள் தீபா, தீபக் ஆகியோர் இதுகுறித்து பதில் தெரிவிக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று (ஜனவரி 5) இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.

அப்போது, இந்த வழக்கில் பதில் அளிக்க கூடுதல் அவகாசம் வேண்டுமென்று தமிழக அரசின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதோடு, பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதாவின் பின்னணி குறித்து விசாரித்து வருவதாகவும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 5 ஜன 2018