மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக உள்ளதா?

ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக உள்ளதா?

வெறும் 500 ரூபாய் செலவில் பத்தே நிமிடத்தில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட ஆதார் தகவல்களைப் பெற்றுவிட்டதாக சமீபத்தில் ஆங்கில நாளிதழான "தி ட்ரிபியூன்" பரபரப்பான செய்தி ஒன்றை வெளியிட்டது. இந்த செய்தி மிகப்பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கியதையடுத்து பிஜேபி மற்றும் தேசிய தனிநபர் அடையாள ஆணையம் இதனை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னதாக கடந்த நவம்பர் மாதம், ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கின்றன என்று UIDAI தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது வெறும் 500 ரூபாய் செலவில் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட ஆதார் தகவல்களை எந்த வித கட்டுப்பாடுகளுமின்றி பெற்றுள்ளதாக தி ட்ரிபியூன் நாளிதழ் கூறியுள்ளது. மேலும் பணம் செலுத்தப்பட்ட அடுத்த பத்து நிமிடங்களில் ஒரு கேட்வே ஆக்சஸ், லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு அளிக்கப்பட்டதாகவும் அதன் மூலமாகவே ஆதார் தகவல்களை அணுக முடிந்தது என்ற அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

வெள்ளி 5 ஜன 2018