மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

உள்ளாட்சித் தேர்தல்: 100 சதவிகிதம் வெற்றி!

உள்ளாட்சித் தேர்தல்: 100 சதவிகிதம் வெற்றி!

வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 100 சதவிகிதம் வெற்றிபெற சூளுரை ஏற்க வேண்டும் என்று ஜெயலலிதா பேரவை திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜெயலலிதா பேரவை செயலாளர்களுக்கான இரண்டு நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் இன்று ( ஜனவரி 5) சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு பேரவையினருக்கு அறிவுரை வழங்கினர்.

பயிற்சி முகாமில் தன்னை அறிதல், எண்ணங்களை மேம்படுத்துதல், உறவுகள் மற்றும் உணர்வுகள், தனி மனித மேம்பாடு, பேச்சாற்றலை வளர்த்தல், எழுத்தாற்றலை வளர்த்தல், செயல்திறனை வளர்த்தல், கட்சிப் பணிகள், வெற்றிக்கான திறவுகோல், மக்கள் பணிகள், சாதனை விளக்கப் பிரச்சாரம், மக்கள் தொடர்புக்கான பண்புகளை வளர்த்தல் ஆகிய 12 தலைப்புகளில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சரும், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் தீர்மானம் வாசித்தார். அதில், அதிமுக அரசின் சாதனைகளை, திட்டங்களை பட்டித் தொட்டியெங்கும் எடுத்துச் சென்று அரசுக்கு மக்கள் செல்வாக்கை அதிகரித்துத் தர வேண்டும், ஜெயலலிதா கூறியபடி 100ஆண்டுகளுக்கு மேல் இந்த இயக்கம் செயல்பட பணியாற்ற வேண்டும். எதிர்வரும் அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடவும், வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 100 சதவிகிதம் வெற்றிபெற்றிட இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வெள்ளி 5 ஜன 2018