மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

மொழிப் பிரச்சினை : திணறும் நித்யா மேனன்

மொழிப் பிரச்சினை : திணறும் நித்யா மேனன்

மெர்சல் படத்தைத் தொடர்ந்து நித்யா மேனன் நடித்து வரும் இந்திப் படத்தில் இந்தி பேச சிரமப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் ஜோடியாக நித்யா மேனன் நடிப்பில் கடைசியாக வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் மெர்சல். இப்படத்தைத் தொடர்ந்து நித்யா மேனன் பிராணா என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் வி.கே.பிரகாஷ் இயக்கத்தில் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளில் தயாராகி வருகிறது. திரில்லர் வகையைச் சேர்ந்த இந்தப் படம் மலையாளத்தில் பிராணா என்ற பெயரில் உருவாகி வருகிறது. மற்ற மொழிகளில் இன்னும் பெயரிடப்படாத நிலையில் மலையாளம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் சுலபமாக பேசி நடிக்கும் நித்யாமேனன், ஹிந்தியில் நடிக்கும் போது மட்டும் சிரமப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து ஸிஃபி இணையதளத்தில் வெளிவந்த செய்தி குறிப்பில் நித்யா மேனனுக்கு இந்தி உச்சரிப்பில் சிரமம் இருப்பதாகவும் அதற்காக அவர் தீவிரமாக இந்தி பயின்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

வெள்ளி 5 ஜன 2018