மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

ஆர்எஸ்எஸ் ஆதரவு: சர்ச்சையில் முன்னாள் நீதிபதி!

ஆர்எஸ்எஸ் ஆதரவு: சர்ச்சையில் முன்னாள் நீதிபதி!

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் கேரளாவின் கோட்டயம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ், “இந்தியாவில் மக்கள் ஏன் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று என்னைக் கேட்டால் அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம், ராணுவம் போன்றவை உள்ளதாகக் கூறுவேன். நான்காவதாக ஆர்எஸ்எஸ் உள்ளது. இவற்றால்தான் மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்” என்று குறிப்பிட்டார். மேலும், மதச்சார்பின்மை என்பதை மதத்திலிருந்து விலக்கி வைக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவை நெருக்கடி நிலைக் காலத்திலிருந்து விடுவித்ததற்காக ஓர் அமைப்புக்கு நற்சான்று வழங்கவேண்டுமென்றால், ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத்தான் வழங்குவேன் என்று கூறிய அவர், “தாக்குதலிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ளப் பாம்புக்கு விஷம் ஆயுதமாக உள்ளது. அதுபோல், மனிதர்களின் வலிமை யாரையும் தாக்குவதற்கு அல்ல. உடலை வலிமைப்படுத்துவற்குக் கடினமான பயிற்சியை ஆர்எஸ்எஸ் கற்றுத்தருகிறது. இதன் மூலம் எந்தத் தாக்குதலுக்கும் எதிராகத் தற்காத்துகொள்ள உதவுகிறது” என்று பாராட்டினார்.

மேலும், “சிறுபான்மையினர் தங்களின் பாதுகாப்புக்கு மதச்சார்பின்மையைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் மதச்சார்மின்மையின் நோக்கம் என்பது அதைவிட உயர்வானது. ஒவ்வொருவரின் கவுரவம் காக்கப்பட வேண்டும் என்பதே அதன் நோக்கம். முன்பு இந்துஸ்தான் என்ற வார்த்தை அனைவரையும் ஈர்த்தது. தற்போது, பிஜேபி, ஆர்எஸ்எஸ் ஆகிய வார்த்தைகள் அனைவரையும் ஈர்க்கின்றன” என்று பேசினார்.

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்எஸ்எஸ்) கடந்த 1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வலதுசாரி அமைப்பான இது காந்தியின் மரணம், எமர்ஜென்ஸி காலம், பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயம் என மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆர்எஸ்எஸுக்கு ஆதரவாக முன்னாள் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வெள்ளி 5 ஜன 2018