பொங்கல் ரேஸ்: விலகிய படங்கள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆறு படங்கள் வெளிவரவிருந்த நிலையில் தற்போது அதிலிருந்து இரண்டு படங்கள் வெளியேறி இருக்கின்றன.
இந்த வருடம் பொங்கலுக்கு சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விக்ரமின் ‘ஸ்கெட்ச்’, அரவிந்த் சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, பிரபுதேவாவின் ‘குலேபகாவலி’, விமலின் ‘மன்னர் வகையறா’, விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியனின் ‘மதுர வீரன்’ ஆகிய படங்கள் வெளியாகவிருப்பதாக விளம்பரங்கள் வந்துகொண்டிருந்தன. இந்நிலையில் பொங்கல் வெளியீட்டிலிந்து திடீரென்று ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘மன்னர் வகையறா’ ஆகிய இரண்டு படங்களும் பின்வாங்கியுள்ளன.
போதிய திரையரங்குகள் கிடைக்கப் பெறாததால் வெளியேறியிருப்பதாக அறிவித்திருப்பதோடு, ஜனவரி வெளியீடு என புதிய போஸ்டர்களையும் இந்தப் படக் குழுவினர் தங்களது ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். எனவே இந்த இரண்டு படங்களும் இம்மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.