மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

சணல் உற்பத்தித் துறையினருக்கு ஆதரவு!

சணல் உற்பத்தித் துறையினருக்கு ஆதரவு!

சணல் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், சணல் பைகளில் தானியங்கள் மற்றும் சர்க்கரை போன்றவற்றைப் பேக்கிங் செய்வதற்கான கால வரம்பை ஜூன் (2018) வரை பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு (CCEA) நீட்டித்துள்ளது.

சணல் தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டு CCEA சணல் பேக்கிங் பொருட்கள் (பொதி பொருட்களில் கட்டாய பயன்பாடு) - 1987 சட்டத்தின் கீழ் இதனைக் கட்டாயமாக்குகிறது. இதன்படி 90 சதவிகிதம் தானியங்களும் 20 சதவிகிதம் சர்க்கரையும் சணல் பைகளில் பேக்கிங் செய்வது கட்டாயமாக்கப்படும். இதனால் 3.7 லட்சம் தொழிலாளர்களும் 40 லட்சம் விவசாயிகளும் பயனடைவார்கள்.

சணல் பொருட்கள் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதோடு, சணல் பொருட்கள் உற்பத்தியினால் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தையில் இத்துறையினர் தங்களது சந்தை வாய்ப்பினைப் பெருக்கிக் கொள்வர். இவற்றை உற்பத்தி செய்வதற்குத் தேவையான உதவியை தொழிலாளர்களுக்கு அரசு வழங்கி வருகிறது. இதன் மூலம் மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, அசாம், ஆந்திரா, மேகாலயா, திரிபுரா போன்ற இடங்களில் உள்ள சணல் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 5 ஜன 2018