மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

முதல்வருக்கு எதிராக ஆளுநர் கடிதம்!

முதல்வருக்கு எதிராக ஆளுநர் கடிதம்!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் சில அமைச்சர்கள் ஆளுநர் அலுவலகத்துக்கு எதிராகத் தொடர்ந்து புகார் தெரிவித்து வருவதாகவும், தவறான தகவல்களைப் பரப்பி சிக்கல்களை உண்டாக்குவதாகவும் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார் அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடி.

புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே பனிப்போர் இருந்து வருகிறது. ஆட்சி மற்றும் நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநர் தலையீடு கூடாது என்று நாராயணசாமி மற்றும் இதர அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு மாறாக, மக்கள் நலன்மிகுந்த திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், அதனைச் செயல்படுத்தி வருவதாகவும் கூறிவருகிறார் கிரண்பேடி.

புதுச்சேரி மாநில நிதிநிலை மற்றும் நிர்வாகம் குறித்து விவாதிக்க, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க நேரம் கேட்டு வந்தார் நாராயணசாமி. கடந்த இரண்டு மாதங்களாக அவர் வேண்டுகோள் விடுத்துவந்த நிலையில், கடந்த 3ஆம் தேதியன்று பிரதமர் அலுவலகத்திலிருந்து

அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து, உடனடியாக டெல்லி சென்று மோடியைச் சந்தித்தார் நாராயணசாமி. அப்போது, துணைநிலை ஆளுநரின் தலையீடு பற்றி அவர் பிரதமரிடம் புகார் கூறியதாகவும் தகவல் வெளியானது. நாராயணசாமி டெல்லி சென்றபோது, கிரண்பேடியும் அங்குதான் இருந்தார். அதன்பின் டெல்லியில் இருந்து அவர் புதுச்சேரி திரும்பினார்.

இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியிருக்கிறார். இது பத்திரிகையாளர்களுக்கும் அனுப்பப்பட்டது.

இதில், “மக்கள் நலத்திட்டங்களுக்கு ஆளுநர் அலுவலகம் முட்டுக்கட்டை போடுவதாக, தொடர்ந்து தவறான குற்றச்சாட்டுகளை முதலமைச்சரும் அவரது சகாக்களும் கூறி வருகின்றனர். உண்மைக்கு மாறாக, இந்த தவறான குற்றச்சாட்டு முன்னெடுக்கப்படுகிறது என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டுவருகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார் கிரண் பேடி.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 5 ஜன 2018