மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

துணிச்சல் அதுல்யா

துணிச்சல் அதுல்யா

காதல் கண் கட்டுதே படம் மூலம் கவனம்பெற்ற அதுல்யா ரவி துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தமிழ் சினிமா கதாநாயகிகளை பொறுத்தவரை ரொமாண்டிக்கான கதாபாத்திரங்களை முதலில் தேர்வு செய்து தனக்கான ரசிகர்களை கணிசமாக உருவாக்கி பின்னர் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் கதாநாயகியை மையமாகக் கொண்ட கதைகளையும் தேர்வு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் தனது இரண்டாவது படத்திலேயே கவர்ச்சி மற்றும் புகைபிடிக்கும் காட்சிகளில் நடித்து மொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார் அதுல்யா. ஏமாலி படத்தின் டீசரை பார்த்து கொந்தளித்த ரசிகர்களை கூல் செய்யும் விதமாக டீசரில் இடம்பெற்ற காட்சிகள் படத்தில் இடம்பெறாது என்றார்.

தற்போது அதுல்யா, ராம்பிராகாஷ் ராயப்பா இயக்கும் சுட்டுபிடிக்க உத்தரவு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். விக்ராந்த், இயக்குநர் மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். மிஷ்கின் உளவுத்துறை அதிகாரியாகவும் சுசீந்திரன், விக்ராந்த் தனியார் பாதுகாப்பு அதிகாரிகளாகவும் நடிக்கின்றனர். அதே போல் அதுல்யாவுக்கும் துணிச்சலான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

தனது கதாபாத்திரம் குறித்து டெக்கான் கிரானிக்கலுக்கு அளித்த பேட்டியின் போது, “எனது கதாபாத்திரம் கட்டாயம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெரும் என நம்புகிறேன்” என்று சுருக்கமாகக் கூறி முடித்துக்கொண்டுள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

வெள்ளி 5 ஜன 2018