மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

சரிவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி!

சரிவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி!

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்தியப் பொருளாதாரமானது 2015-16 நிதியாண்டில் 8 சதவிகிதமும், 2016-17 நிதியாண்டில் 7.1 சதவிகிதமும் வளர்ச்சி கண்டிருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டில் பணமதிப்பழிப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகளால் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. நடப்பு நிதியாண்டின் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டில் வளர்ச்சி மேம்பட்டாலும், 2017-18 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7 சதவிகித்தைத் தாண்டாது என்று கூறும் எஸ்பிஐ ரிசர்ச் நிறுவன தலைமைப் பொருளாதார நிபுணரான சவுமியா காந்தி கோஷ், 6.5 சதவிகித வளர்ச்சியை வேண்டுமானால் எதிர்பார்க்கலாம் என்கிறார்.

திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவரான மோண்டெக் சிங் அலுவாலியாவின் கணிப்புப் படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.2 % அல்லது 6.3 சதவிகிதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்தியாவின் மொத்த மதிப்புக் கூட்டு வளர்ச்சி (GVA) 6.6 முதல் 6.8 சதவிகிதம் வரையில் இருக்கும் என்று ஆக்சிஸ் வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணரான சுகட்டா பட்டாச்சார்யா கருதுகிறார். மேலும், வரி வசூல் உயரும் பட்சத்தில் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றம் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

திட்டக் குழுவின் முன்னாள் உறுப்பினரும் முன்னணிப் பொருளாதார நிபுணர்களில் ஒருவருமான அபிஜித் சென் கூறுவது யாதெனில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது நடப்பு நிதியாண்டில் 6 முதல் 6.5 சதவிகித இடைவெளியில் இருக்கும்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 5 ஜன 2018