மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை :எம்பி மனு!

பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை :எம்பி மனு!

பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டுமென அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டாவை சந்தித்து மனு அளித்தார்.

கடந்த 2015-16ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ஜார்கண்ட் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்வடிவம் பெற்றுவிட்டது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தஞ்சாவூரில் உள்ள செங்கிபட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை நகரம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செங்கல்பட்டு உள்ளிட்ட 5இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள நிலையில், அதன்பிறகான பணிகள் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபாமா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவை நேற்று (ஜனவரி 5) சந்தித்து பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்று ஒரு மனு அளித்துள்ளார்.

தனது மனுவில், "தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பெருந்துறை உள்ளிட்ட 5இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி 327 ஏக்கர் பரப்பில் பசுமையாகப் படர்ந்துள்ளது. இது ஈரோடு, கோயம்புத்தூர் நெடுஞ்சாலையிலிருந்து 20 கிலோமீட்டர் மேற்கே அமைந்துள்ளது. கோயம்புத்தூர், சேலம் மற்றும் பெருந்துறை நகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 47 ஐ வெகு சுலபமாக அணுகும் வகையில் இந்த இடம் அமைத்துள்ளதோடு ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவைகளும் நோயாளிகள் சென்று வர சிறப்பாக அமைந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் எய்ம்ஸ் என்ற அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை அமையுமானால் தமிழ்நாட்டில் மேற்கத்திய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2 கோடி பேர் பயன்பெறுவார்கள் என்பதோடு கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களைச் சேர்ந்த ஏழை மக்களும் மருத்துவ வசதிகளைப் பெறுவார்கள் என்று குறிப்பிட்டுள்ள சத்யபாமா, எய்ம்ஸ் போன்றதொரு உயர் தரத்திலான மருத்துவ வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைவது கொங்கு மண்டல மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கக் கூடியதாக அமையும்" என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

வெள்ளி 5 ஜன 2018