மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

ராஜஸ்தானில் மீண்டும் பன்றிக் காய்ச்சல்!

ராஜஸ்தானில் மீண்டும் பன்றிக் காய்ச்சல்!

ராஜஸ்தான் மாநிலத்தின் பல பகுதிகளில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் ஏராளமான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் சமீபகாலமாக பன்றிக் காய்ச்சலால் நிறைய மக்கள் பாதிக்கப்பட்டு, உயிரிழந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ராஜஸ்தானில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. இதன்காரணமாக 417 பேர் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் உரியச் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினர்.

இந்த நிலையில் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த மூன்று நாள்களில் 85 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர். மேலும், பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 2017இல் இம்மாநிலத்தில் பன்றிக் காய்ச்சலால் 3,619 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 279 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பன்றிக் காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வெள்ளி 5 ஜன 2018