மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

மீண்டும் ‘தர்மதுரை’ கூட்டணி!

மீண்டும் ‘தர்மதுரை’ கூட்டணி!

தர்மதுரை படத்தின் வெற்றிக்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கும் அடுத்த படத்தில் மீண்டும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் யுவன் சங்கர் ராஜா.

விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிப்பில் வெளியான தர்மதுரை படம் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப்பெற்றது. இளையராஜா-வைரமுத்து கூட்டணியை இணைக்கும் முயற்சி கைகூடாமல் போகவே தர்மதுரை படத்தில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா- வைரமுத்து கூட்டணியை அமைத்தார் சீனு ராமசாமி. அந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பினால் மீண்டும் அதே கூட்டணியை தனது அடுத்த படத்திற்கும் தொடர்ந்திருக்கிறார் சீனு.

இது குறித்து சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “மீண்டும் எனை மீட்டிடப்போகிறது. வைரமுத்துவின் கவித்துவ வரிகளில்.. யுவன் சங்கர் ராஜாவின் ராகங்கள்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வெள்ளி 5 ஜன 2018