மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

உயரும் தோட்டக்கலைப் பயிர் உற்பத்தி!

உயரும் தோட்டக்கலைப் பயிர் உற்பத்தி!

2017ஜூலை முதல் 2018 ஜூன் வரையிலான நடப்பு வேளாண் பருவ ஆண்டில் தோட்டக்கலைப் பயிர்கள் உற்பத்தி 1.6 சதவிகிதம் அதிகரிக்கும் என்று வேளாண் துறை மதிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வேளாண் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தோட்டக்கலை மூலம் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களின் முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி நடப்பு வேளாண் பருவ ஆண்டில் 305.4 மில்லியன் டன் உற்பத்தியாகும். இது இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.6 சதவிகிதம் கூடுதலாகும். 2015-16 வேளாண் பருவ ஆண்டில் 300.6 மில்லியன் டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. காய்கறிகளின் உற்பத்தியே இந்தாண்டு அதிகமாக இருக்கும். பழங்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் உற்பத்தி சற்று குறைந்துள்ளது. அதிகபட்சமாகத் தக்காளி 22.3 மில்லியன் டன் உற்பத்தியாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 20.7 மில்லியன் டன் தக்காளி உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. இது இந்த ஆண்டு மதிப்பிடப்பட்டுள்ளதை விட 7.7 சதவிகிதம் குறைவாகும். உருளைக்கிழங்கு 1 சதவிகித வளர்ச்சியுடன் 49.3 மில்லியன் டன் உற்பத்தியாகும்.

வெங்காயத்தின் உற்பத்தி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4.5 சதவிகிதம் சரியும். கடந்த ஆண்டில் 22.4 மில்லியன் டன்னாக இருந்த வெங்காயம் உற்பத்தி இந்த ஆண்டில் 21.4 மில்லியன் டன்னாக குறையும். பழ வகைகளைப் பொறுத்தவரையில், இந்தியாவின் பழ உற்பத்தியில் வாழைக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் மாம்பழம் 6.2 சதவிகித வளர்ச்சி கண்டு 20.7 மில்லியன் டன் உற்பத்தியாகும். கடந்த ஆண்டு வேளாண் பருவத்தில் 19.5 மில்லியன் டன் அளவிலான மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது’ என்று கூறப்பட்டுள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 5 ஜன 2018