மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

மோடிக்கு இஸ்ரேலின் பொங்கல் பரிசு!

மோடிக்கு இஸ்ரேலின் பொங்கல் பரிசு!

வரும் ஜனவரி 14ஆம் தேதி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு இந்தியா வருகிறார். கடந்த வருடம் ஜூலை மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். 7 ஆண்டுகளுக்குப் பின் இஸ்ரேலுக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பதால் அவருக்கு இஸ்ரேலில் மிகப் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது இந்திய பிரதமர் விடுத்த அழைப்பின் பேரில்தான் இப்போது வருகிறார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன் யாஹூ.

இந்தியா வரும்போது மோடிக்குப் பிடித்தமான ஒரு முக்கியமான பொங்கல் பரிசையும் பெஞ்சமின் நெத்தன்யாஹூ எடுத்து வருகிறார் என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. அப்படி என்ன முக்கியமான பரிசு?

மோடி இஸ்ரேல் சென்றபோது அவரும் நெத்தன்யாஹுவும் GAL MOBILE எனப்படும் ஒரு வகை பிரத்யேக ஜீப்பில் மத்திய தரைக் கடலில் ஓல்கா கடற்கரை அருகே உள்ள கடற்பகுதியில் பயணம் மேற்கொண்டனர். அங்கேதான் இஸ்ரேல் நாட்டின், ‘கடல் நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம்’ இருக்கிறது. அந்த ஜீப்பின் சிறப்பு அம்சம் என்னவென்றால் கடலில் செல்லும் அந்த ஜீப் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் லிட்டர் கடல் நீரை குடிநீராகச் சுத்திகரிப்பு செய்யும். கடல் நீர் அல்லாத மற்ற நீர் நிலைகளின் நீர் என்றால் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் லிட்டர் வரை இந்தப் பிரத்யேக வாகனம் சுத்திகரிப்பு செய்யும். இது உலக சுகாதார நிறுவனம் இந்த வாகனத்துக்கு வழங்கிய சான்றிதழாகும்.

ஒரு லட்சத்து ஆயிரம் டாலர் விலை கொண்ட இந்த ஜீப்பில்தான் மோடியும், நெத்தன்யாஹுவும் ஒல்கா கடற்கரையை ஒட்டிய மத்திய தரைக் கடல் பகுதியில் பயணம் செய்தனர். இந்த வாகனம் பற்றி நெத்தன்யாஹூ விவரித்தபோது மோடி வியப்படைந்தார்.

இந்த நிலையில் வரும் ஜனவரி 14ஆம் தேதி டெல்லி வரும் பெஞ்சமின் நெத்தன்யாஹூ தனது பொங்கல் பரிசாக மோடிக்கு மேற்குறிப்பிட்ட, ‘கடல் நீரை குடிநீராக்கும் ஜீப்’ ஒன்றைப் பரிசளிக்க இருக்கிறாராம்.

வெள்ளம் மற்றும் இயற்கைச் சீற்ற காலங்களில் இந்த வாகனம் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று அப்போதே மோடி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

வெள்ளி 5 ஜன 2018