மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

ஏடிஎம்களில் ரூ.200 நோட்டு: ஆர்பிஐ!

ஏடிஎம்களில் ரூ.200 நோட்டு: ஆர்பிஐ!

ஏடிஎம்களில் ரூ.200 நோட்டுக்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

பணமதிபழிப்பு அறிவிப்பிற்குப் பிறகு சில்லறை தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் புதிதாக ரூ.200 ,ரூ.50, ரூ.20 நோட்டுக்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. ரூ.200 நோட்டுகள் வெளியிட்டு ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும், அவை இன்னும் சகஜமாக புழக்கத்துக்கு வரவில்லை. 200 ரூபாய் தாளின் அளவு வித்தியாசமாக இருப்பதால் அவற்றை ஏடிஎம்களில் வைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதாவது 200 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் விரைவாக ஏடிஎம்களை மறுவடிவமைக்க வேண்டும். அதன்படி, பொது மக்களுக்கு ரூ.200 நோட்டு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் மொத்தம் 2.2 லட்ச ஏடிஎம் மையங்கள் உள்ளன. அனைத்தையும் மறுவடிவமைப்பு செய்வதற்கு ரூ.110 கோடிக்கும் மேல் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு ஏ.டி.எம் இயந்திரத்தை மறுவடிவமைக்க சராசரியாக 5 ஆயிரம் ரூபாய் செலவாகும். மேலும் இந்தப் பணிகள் அடுத்த 5-6 மாதத்தில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர புதிய 10 ரூபாய் நோட்டுகளை சாக்லேட் பழுப்பு (பிரவுன்) நிறத்தில் அச்சிட்டு வெளியிடவுள்ளதாக ரிசர்வ வங்கி தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

4 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் ...

3 நிமிட வாசிப்பு

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் போக்குவரத்து மாற்றம்!

வெள்ளி 5 ஜன 2018