மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

கமல் தயாரிப்பில் விக்ரம்?

கமல் தயாரிப்பில் விக்ரம்?

கதாபாத்திரத்திற்காக உடல் எடையைக் கூட்டி, குறைத்து அதிகம் மெனக்கெட்டு, ஒரு படத்திற்காக வருடக்கணக்கில் செலவிடக்கூடியவர்களில் ஒருவர் விக்ரம். தற்போது அடுத்தடுத்துப் பல படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார். ஏற்கனவே கைவசம் மூன்று படங்களை வைத்துள்ள இவர் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கமலிடம் உதவியாளராகத் தனது திரைவாழ்க்கையை தொடங்கியவர் ராஜேஷ் எம். செல்வா. இவர் கமலைக் கதாநாயகனாகக் கொண்டு இயக்கிய தூங்காவனம் திரைப்படம் கவனம் பெற்றது. ஃப்ரெஞ்ச் திரில்லர் திரைப்படம் ஒன்றின் பாதிப்பில் உருவாக்கிய அந்த திரைப்படம் போலவே மற்றொரு கதையை எழுதி இயக்கவுள்ளார். “இந்த படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார். இது தொடர்பாக விக்ரம் கமல் இருவரும் சந்தித்துள்ளனர். விக்ரமுக்கு முன்பணமும் கொடுக்கப்பட்டுள்ளது” என்று படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

“படக் குழு அதிகாரபூர்வ அறிவிப்பை ஜனவரி 1 அன்று வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக டிசம்பர் 31ஆம் தேதி விக்ரமின் தந்தை காலமானதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு தள்ளிப்போடப்பட்டது” என்று கூறியுள்ளனர்.

கமல் தனது தயாரிப்பில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மகளிர் மட்டும், நள தமயந்தி ஆகிய மூன்று படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடிக்கவில்லை. இந்தப் படம் உறுதியானால் அவர் தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்காத நான்காவது படம் இதுவாக இருக்கும்.

இந்தத் தகவலை உறுதிபடுத்த டைம்ஸ் ஆஃப் இந்தியா இயக்குநர் செல்வாவை தொடர்பு கொண்டு பேசியபோது, “இன்னும் திரைக்கதை பணிகளை நான் முடிக்கவில்லை. அதனால் இதில் யார் நடிக்கிறார் என்பதை இவ்வளவு சீக்கிரமாக தெரிவிக்க முடியாது” என்று அவர் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வெள்ளி 5 ஜன 2018