மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

ஜெய்க்கு எதிராகப் புகார்!

ஜெய்க்கு எதிராகப் புகார்!

பலூன் படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர் ஜெய் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் பலூன். திரையரங்கில் இந்தப் படம் ஓடிக் கொண்டிருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ரீதியில் வரவேற்பைப் பெறவில்லை. இந்த படம் நஷ்டம் அடைந்ததற்குக் காரணம் நடிகர் ஜெய்தான் என்று படத்தின் தயாரிப்பாளர்கள் நந்த குமார் மற்றும் அருண் பாலாஜி ஆகியோர் தயாரிப்பாளர் சங்கத்தில் நேற்று (ஜனவரி 4) புகார் அளித்துள்ளனர்.

அந்த புகார் கடிதத்தில், “2016ஆம் ஆண்டில் பலூன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் 2017 டிசம்பர் மாதம் தான் ரிலீஸ் செய்ய முடிந்தது. இதற்குக் காரணம் நடிகர் ஜெய் தான். படப்பிடிப்புக்குச் சரியாக வராமலும், ஒத்துழைப்பு வழங்காமலும் இழுத்தடித்து வந்தார். ஜெய் கொடுத்த டார்ச்சரால் படத்தின் இயக்குநர் சினிஷ் தற்கொலை செய்யும் மனநிலைக்குத் தள்ளப்பட்டார்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 5 ஜன 2018