மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

சரக்குப் போக்குவரத்தை உயர்த்த இலக்கு!

சரக்குப் போக்குவரத்தை உயர்த்த இலக்கு!

இந்திய ரயில்வே சரக்குப் போக்குவரத்தை மூன்று மடங்கு உயர்வுடன் 3 பில்லியன் டன்னாக உயர்த்த ரயில்வே துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதுகுறித்து ஜனவரி 2ஆம் தேதி மத்திய ரயில்வே துறை அமைச்சரான பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2030ஆம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வேயின் சரக்குப் போக்குவரத்தை மும்மடங்கு உயர்த்தி 3 பில்லியன் டன்னாக மாற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான மேம்பாட்டுப் பணிகளை இந்திய நிறுவனங்களே மேற்கொள்ளும். நாங்கள் இந்தியப் பொருளாதாரத்தை 10 லட்சம் கோடி மதிப்புடையதாக மாற்ற முயற்சித்து வருகிறோம். ரயில்வேயின் சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்க ரயில்வேத் துறையின் பங்குகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். தற்போது இந்தியாவின் சரக்குப் போக்குவரத்து அளவு 1.1 பில்லியன் டாலராகவுள்ளது. மொத்த பொருட்களின் இயக்கம் தற்போது 35 சதவிகிதமாக உள்ளது. இதை 50 சதவிகிதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

வெள்ளி 5 ஜன 2018