மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

ரஜினிக்காக வீதி வீதியாகச் செல்வேன்!

ரஜினிக்காக வீதி வீதியாகச் செல்வேன்!

அரசியலுக்கு வருவேன் என்ற ரஜினியின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள நடிகர் விஷால், அவருக்காக வீதி வீதியாகப் பிரசாரம் செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

கடந்த மாதம் 31ஆம் தேதி தனது ரசிகர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாகத் தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து ரசிகர்களை இணைக்கும்விதமாக இணையதளத்தையும் செயலியையும் அவர் அறிமுகம் செய்துள்ளனர். ரஜினியின் அரசியல் வருகைக்குத் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளதுடன் அவரது கட்சியில் இணையவும் முடிவு செய்துள்ளனர். நடிகர் ராகவா லாரன்ஸ் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன் அவரது கட்சியில் சேர்வது தொடர்பாக விரைவில் அறிவிப்பதாகவும் அறிவித்துள்ளார்

இந்த நிலையில், சென்னையில் நேற்று (ஜனவரி 4) செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால், “ரஜினி அரசியலுக்கு வருவது நல்ல விஷயம். தலைவர் அரசியலில் இறங்கியுள்ளார். என்னைப் பொறுத்தவரை அரசியல் என்பது சமூகச் சேவை. ரஜினி அனைவருக்கும் நல்ல பாதையைக் காட்டுவார் என்று நம்புகிறேன். அந்த வகையில், ஒரு தொண்டனாக அவருக்காக எந்தத் தொகுதியிலும் வீதி வீதியாகப் பிரசாரம் செய்வேன்” என்று குறிப்பிட்டார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 5 ஜன 2018