மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

வாய்ப்புகளை நழுவவிட்ட ரகுல்

வாய்ப்புகளை நழுவவிட்ட ரகுல்

முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவந்த ரகுல் பிரீத் சிங் தற்போது இரண்டு ஹிட் படங்களின் வாய்ப்பை இழந்துள்ளார்.

தமிழில் புத்தகம், என்னமோ ஏதோ, தடையறத்தாக்க ஆகிய படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். ஆனால், இந்தப் படங்களுக்குப் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்குக்குச் சென்ற அவர், சில முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றி முன்வரிசை நாயகியானார். அதோடு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தவர், கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும் நடித்தார்.

இந்தப் படங்களுக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் என இரண்டு மெகா படங்களில் நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், இரண்டு படங்களிலுமே ரகுலுக்கு அமையவில்லை. அவர் இடத்தை கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி ஆகியோர் கைப்பற்றி விட்டனர்.

விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும், சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவியும் நடிக்கிறார்கள். இதன்மூலம் இரண்டு மெகா படங்களின் வாய்ப்பை அவர் இழந்துள்ளார். ரகுலுக்குப் பட வாய்ப்புகள் அமையாததற்கு ஸ்பைடர் படத்தின் தோல்விதான் என்று செய்திகள் வெளிவந்தன.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

வெள்ளி 5 ஜன 2018