தினம் ஒரு சிந்தனை: பாதிப்பு!

மனிதர்கள் அவர்களுக்கு ஏற்படும் விஷயத்தை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை பொறுத்தே, அவர்களுக்கான பாதிப்பு இருக்கிறது.
- எபிக்டீடஸ் (கிபி 50 - 135). புகழ்பெற்ற கிரேக்க தத்துவஞானி. துருக்கியில் அடிமையாகப் பிறந்த இவர், தனது மிகச்சிறந்த தத்துவங்களால் அறியப்படுகிறார். மனிதர்களின் தனிப்பட்ட செயல்களுக்கு அவர்களே பொறுப்பு, அவற்றைக் கடுமையான சுய ஒழுக்கத்தின் மூலம் ஆராய்ந்து கட்டுப்படுத்த முடியும் என்பது இவரது கொள்கைகளாகும். அனைத்து வெளிப்புற நிகழ்வுகளும் விதியால் தீர்மானிக்கப்படுகிறது எனக் கூறினார்.