மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

ஹெல்த் ஹேமா - புதினாவில் உள்ள புதுமைகள்!

ஹெல்த் ஹேமா - புதினாவில் உள்ள புதுமைகள்!

புதினாவில் வயல் புதினா, காரன் புதினா, ஜப்பானிய புதினா, கோசி, பேப்பர் மின்ட் என்பன உள்பட 40 வகை புதினாக்கள் இருக்கின்றன. இதில் ஏ, பி, சி வைட்டமின்கள், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், சுண்ணாம்பு, நார், புரதம் என்று பல்வேறு சத்துகளும் நிரம்பி உள்ளன.

இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் பொருள்கள் பெருங்குடல் புற்றுநோயைத் தீர்க்கும் என்று மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது. 5 ரூபாய்க்கு கை நிறைய கிடைக்கும் புதினாவில் உள்ள மருத்துவச் சக்தி அபாரமானது. பத்து புதினா இலைகளைக் கழுவி பச்சையாக அப்படியே மென்று சாப்பிடலாம். அல்லது, புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அருந்தலாம். வயிற்றுவலி, அஜீரணம், வாயுத் தொல்லை, மலச்சிக்கல், உப்புசம், வயிற்றிப் போக்கு உள்பட பல வயிற்றுப் கோளாறுகளைத் தீர்த்து விடும்.

இதன் தண்டுகளையும், இலைகளையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் தேன், எலுமிச்சைச் சாறு பிழிந்து இரவிலும், அதிகாலையிலும் குடித்துவந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள், புழுக்கள் நீங்கும். மேலும் காய்ச்சல், நீர்க்கடுப்பு, செரிமானம் ஆவதில் பிரச்னை போன்றவை இருந்தால் புதினா சாற்றுடன் எலுமிச்சைச் சாறு கலந்து குடித்தால் இந்தப் பாதிப்புகள் நீங்கி விடும்.

நம் சமையலில் மணத்துக்காகச் சேர்க்கப்படும் புதினா, பல மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. உதாரணமாக நாம் சாப்பிடும் அசைவ உணவு மற்றும் கொழுப்பு நிறைந்த பொருள்களை எளிதில் ஜீரணமாக்குகிறது. பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கிறது.

புதினா கீரையை தினமும் உணவில் சேர்த்தால் உடம்பின் ரத்தத்தை சுத்தம் செய்வது அல்லாமல், வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.

மலச்சிக்கல் பிரச்னைகள் வராமல் தடுக்கும். வயிற்றில் உள்ள புழுக்களை அழித்து வாயுத் தொல்லையைப் போக்கும்.

தசைவலி, நரம்புவலி, தலைவலி போன்ற வலி உள்ள இடங்களில் புதினாவை நீர் விடாமல் அரைத்து பற்றுப் போட்டு வந்தால், வலிகள் மறையும். ஆஸ்துமா ஏற்படாமலும் புதினா தடுக்கிறது. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், ரத்தசோகை, நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் புதினாவைத் தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முகப்பரு மற்றும் வறண்ட சருமம் உள்ளவர்கள் புதினாவின் சாற்றை முகத்தில் பருக்கள் உள்ள இடங்களில் தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவிவர முகம் பளபளப்பாகும்.

புதினா இலைகளைக் காய வைத்து, பின் அதைப் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து, தினமும் அதைக் குடித்துவந்தால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வெள்ளி 5 ஜன 2018