மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

கோயில்களை நோக்கி ராகுலின் பார்வை!

கோயில்களை நோக்கி ராகுலின் பார்வை!

மிதமான இந்துத்வாவைப் புகுத்தி குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி கண்ட காங்கிரஸ், அதே யுக்தியை கர்நாடகா, மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் பயன்படுத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குஜராத்தில் கடந்த டிசம்பர் 9 மற்றும் 14 தேதிகளில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் டிசம்பர் 18ஆம் தேதியன்று வெளியானது. இதில் 99 தொகுதிகளோடு பாஜக பெரும்பான்மை பெற்றாலும், அதற்கு சவால் அளிக்கும் வகையில் 77 இடங்களைப் பெற்றது காங்கிரஸ் கட்சி. வாக்கு சதவிகிதத்தில் பாஜகவை நெருங்கியிருந்தது. சில தொகுதிகளில் 1,000க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இப்படியொரு விளைவு உண்டாக, காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழு கடுமையாக உழைப்பைக் கொட்டியதும் ஒரு காரணம்.

குறிப்பாக, பாஜகவின் இந்துத்வா கொள்கையை மழுங்கடிப்பதற்காக, தேர்தல் பிரசாரத்தின்போது குஜராத்திலுள்ள பல கோயில்களுக்குச் சென்றுவந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அவரது பக்தி பற்றி பாஜகவினர் கேள்வி எழுப்பியபோது, ‘தான் மட்டுமல்ல, தனது குடும்பத்திலுள்ள அனைவருமே சிவபக்தர்கள்’ என்று பதிலளித்தார். மிதமாக இந்துத்வாவைப் பயன்படுத்தும் காங்கிரஸின் இந்த யுக்தி, குஜராத்தில் வெற்றிகளைத் தந்ததாகக் கருதுகின்றனர் காங்கிரஸ் கட்சியினர். இதனாலேயே, வரும் ஆண்டில் நடைபெறும் சில மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களிலும் அதைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் தேர்தலின்போது, கோயில்களுக்குச் செல்வதால் முஸ்லிம் மக்களின் வாக்குகள் கிடைக்காது என்று சொல்லப்பட்டது. இதற்கேற்றாற்போல, அசாதுதீன் ஓவைசி போன்ற முஸ்லிம் தலைவர்கள் காங்கிரஸின் மாறிவரும் பார்வையை விமர்சனம் செய்தனர். ஆனாலும், குஜராத் வெற்றிகளை மறக்க காங்கிரஸ் விரும்பவில்லை என்பதே உண்மை.

தற்போது ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் உள்ள பிரம்மா கோயில் மற்றும் ஜோத்பூரிலுள்ள சாமுண்ட மாதா கோயிலுக்குச் செல்ல ராகுல் காந்தி விருப்பம் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இதுதவிர, அந்தந்த மாநிலங்களில் செயல்பட்டுவரும் சில மடங்களுக்கும் சென்றுவர, அவர் தயாராக இருக்கிறாராம். இதற்கான ஏற்பாடுகளைச் சுற்றிச்சுழன்று செய்துவருகின்றனர் ராகுலின் குழுவினர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 5 ஜன 2018