மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

காய்கறிகள், பழங்கள் ஏற்றுமதி சரிவு!

காய்கறிகள், பழங்கள் ஏற்றுமதி சரிவு!

சர்வதேச நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள தரக் கட்டுப்பாடுகளால் இந்தியாவின் காய்கறிகள், பழங்கள் ஏற்றுமதி 26.3 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.

2017ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில் இந்தியாவிலிருந்து 14.4 லட்சம் டன் அளவிலான காய்கறிகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2016ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்தியா 19.5 லட்சம் டன் அளவிலான காய்கறிகளை ஏற்றுமதி செய்திருந்தது. எனவே, ஏற்றுமதியில் 26.3 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளதாக இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், பழங்கள் ஏற்றுமதியும் மேற்கூறிய காலகட்டத்தில் 17 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. அதாவது, 2016ஆம் ஆண்டின் ஏப்ரல் - அக்டோபரில் 3,86,063 டன் அளவிலான பழங்கள் ஏற்றுமதியாகியிருந்த நிலையில் 2017ஆம் ஆண்டின் ஏற்றுமதி 3,21,220 டன்னாகக் குறைந்துள்ளது.

காய்கறிகள், பழங்கள் ஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில் சேமிப்புக் கிடங்கு, உள்கட்டுமான வசதிகளை மேம்படுத்துதல், அதிக மற்றும் தரமான உற்பத்தி போன்ற நடவடிக்கைகளை இந்தியாவும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், இந்திய அரசு விதித்துள்ள ஏற்றுமதி விதிமுறைகள் பின்னடைவை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. அதோடு மட்டுமல்லாமல் ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள கட்டுப்பாடுகளை சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதால் தரச் சோதனைகளுக்கு உட்பட்ட இந்தியாவின் காய்கறிகள், பழங்கள் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்படுகிறது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

வெள்ளி 5 ஜன 2018