மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

தொடங்கியது தேடுதல் வேட்டை!

தொடங்கியது தேடுதல் வேட்டை!

மாயமான மலேசிய விமானத்தைத் தேடுவதற்காக, ஓசியன் இன்பினிட்டி என்ற அமெரிக்க நிறுவனத்தை ஏற்பாடு செய்துள்ளது மலேசிய அரசு. இதனால், தென்னாப்பிரிக்கக் கடல் பகுதியில் மீண்டும் விமானத்தைத் தேடும் பணி தொடங்கப்படவுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதியன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவிலுள்ள பீஜிங் நகரத்துக்கு எம்எச் 370 விமானம் கிளம்பியது. அதில் 227 பயணிகளும் 12 ஊழியர்களும் இருந்தனர். புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே, அந்த விமானம் மாயமானது. அது கடலில் மூழ்கியிருக்கலாம் என்ற நோக்கில், அதைத் தேடும் பணிகள் நடந்துவந்தது.

மலேசியா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா நாட்டு அரசுகள் இந்தப் பணியில் ஈடுபட்டுவந்தன. 1,046 நாள்களுக்குப் பிறகு, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தத் தேடுதல் பணி முடிவுக்கு வந்தது. மலேசிய விமானத்தின் ஒரு உதிரிபாகம் தென்னாப்பிரிக்கக் கடல் பகுதியில் மிதந்து வந்தது. ஆனாலும், அதை வைத்து, அந்த விமானம் எங்கு விழுந்தது என்று கண்டுபிடிக்க இயலவில்லை.

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஓசியன் இன்பினிட்டி என்ற நிறுவனத்தின் மூலம் மீண்டும் தேடுதல் பணிகளைத் தொடங்கவிருக்கிறது மலேசிய அரசு. இதற்கான ஒப்பந்தங்கள் இன்னும் ஓரிரு நாளில் கையெழுத்தாகும் என்று தெரிவித்திருக்கின்றனர் மலேசிய நாட்டு அதிகாரிகள். அதிநவீன வசதிகளுடன் கூடிய கப்பல்கள் மற்றும் கடலின் அடி ஆழத்துக்குச் சென்று தேடும் வகையிலான நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்கி வருகிறது ஓசியன் இன்பினிட்டி நிறுவனம்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

வெள்ளி 5 ஜன 2018