மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

புனே அணிக்குத் துன்பத்தில் இன்பம்!

புனே அணிக்குத் துன்பத்தில் இன்பம்!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று (ஜனவரி 4) புனே, கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி டிராவில் முடிவடைந்தது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் புனே மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. தொடக்கத்தில் புனே அணி ஆதிக்கம் செலுத்தியது. எனவே, போட்டியின் 33ஆவது நிமிடத்தில் புனே அணி வீரர் மார்செலோ லேய்டி பெரிரா முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.

அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற இரண்டாம் பாதியில் 73ஆவது நிமிடத்தில் கேரள அணி வீரர் மார்க் சிஃப்நோஸ் ஒரு கோல் அடித்து போட்டியைச் சமன் செய்தார். இரு அணிகளும் சமனில் இருந்தபோது புனே அணி வீரர் அடில் கான் கோல் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். எனவே, இரண்டாவது கோல் வாய்ப்பை இழந்த புனே அணி வெற்றி பெற முடியாமல் போனது.

இருப்பினும் போட்டி 1-1 என சமனில் முடிந்ததால். புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் புனே அணி முதலிடம் பெற்றுள்ளது. கேரள அணி இதுவரை விளையாடிய எட்டு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வெள்ளி 5 ஜன 2018