மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

நிவேதாவின் வித்தியாச ஆசை!

நிவேதாவின் வித்தியாச ஆசை!

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவியுடன் ‘டிக் டிக் டிக்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நிவேதா பெத்துராஜ். நேற்று (ஜனவரி 4) காலை சென்னையில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. விழாவில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர். அப்போது நிவேதா தனது வித்தியாசமான ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

நிவேதா பேசும்போது, ‘‘இந்தப் படத்துக்காக இயக்குநர் சக்தி சரவணன் சார் என்னை ஐந்து நிமிடமே பார்த்தார். உடனே அந்த கேரக்டருக்காக என்னை தேர்ந்தெடுத்தார். அதற்காகவே நான் இந்தப் படத்தில் சண்டை காட்சிகளில் கூட நிறைய ரிஸ்க் எல்லாம் எடுத்து துணிச்சலாக நடித்துள்ளேன். என் கேரக்டர் நடிக்க கடினமானது என்றாலும் இந்தப் படக்குழுவினருடன் பணியாற்றியது இனிய அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் என்னுடன் ‘ஜெயம்’ ரவி மகன் ஆரவ் குட்டியும் நடித்துள்ளான். அவனைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். அவனுக்கு இது முதல் படம். சிறப்பாக நடித்துள்ளான். அவனும் எதிர்காலத்தில் பெரிய நடிகனாக வருவான். அப்படி அவன் பெரிய நடிகனாகி அவனது 100ஆவது படத்தில் பாட்டியாக நான் நடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஜெயம் ரவி பேசும்போது, ‘‘நான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதும் நிறைய பேர், ‘என்ன விண்வெளி சம்பந்தப்பட்ட படத்தில் நடிக்கிறீர்களா? இது சாத்தியமா, ரிஸ்க் இல்லையா?’ என்றெல்லாம் பயமுறுத்தினார்கள். ஆனால், இதை நான் ரிஸ்க் என்று நினைக்கவில்லை. விரும்பி ஏற்றுக்கொண்ட படம் இது. நல்ல படம் எடுத்தால் அதற்கு பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் நிச்சயம் ஆதரவு தருவார்கள் என்பது எனக்குத் தெரியும். அந்த வகையில் இந்தப் படத்தை தரமான ஒரு படமாக எடுத்துள்ளார் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், படக்குழுவால் வெளியிடப்பட்ட டீஸர், ட்ரெய்லர் மற்றும் தீம் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, படத்தின் அனைத்துப் பாடல்களும் வெளியாகியுள்ளன. இந்தப் படம் இசையமைப்பாளர் டி.இமானுக்கு 100ஆவது படம் ஆகும். படத்தை ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 5 ஜன 2018