மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

பியூட்டி ப்ரியா - பனியைக்கண்டு பயப்பட வேண்டாம்!

பியூட்டி ப்ரியா - பனியைக்கண்டு பயப்பட வேண்டாம்!

தற்போது பனி அதிகம் பொழிகிறது. இதனால் ஏராளமான சரும பிரச்னைகளைப் பலரும் சந்திப்பார்கள். குறிப்பாக, வறட்சியான சருமம் கொண்டவர்கள் அதிகளவு கஷ்டப்படுவார்கள். இதுபோன்ற பனிக்காலத்தில் சருமத்தில் உள்ள ஈரப்பசை நீங்கிவிடும். வெடிப்புகள் தோன்றும். அது அதிகமாக அதிகமாக சிலருக்கு ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனால் தொற்றுகளும் ஏற்படலாம்.

சிலர் சரும வறட்சியைத் தடுப்பதற்கு பல மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துவார்கள். ஆனால், இது குறிப்பிட்ட நேரம் வரைதான் இருக்கும். மேலும், மாய்ஸ்சுரைசர்களில் உள்ள கெமிக்கல்கள் சிலருக்கு பக்கவிளைவை ஏற்படுத்தலாம். ஆகவே, சரும வறட்சியைத் தடுத்து, சருமத்தில் இயற்கையாகவே சுரக்கப்படும் எண்ணெய் பசையின் அளவை தூண்டும் சில இயற்கை வழிகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தினால், சருமம் மென்மையாகி சரும செல்களின் ஆரோக்கியமும் மேம்படும்.

வெள்ளரிக்காயில் 80 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது. வறட்சியான சருமத்தினருக்கு இது மிகவும் ஏற்ற பொருள். இது பாதிக்கப்பட்ட சருமத்தைச் சரிசெய்வதோடு, சருமத்தின் ஈரப்பசையைத் தக்கவைக்கவும் செய்யும். மேலும், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் சூரியக்கதிர்களால் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதோடு, சருமத்தை மென்மையாகவும் வைத்துக்கொள்ளும். எனவே, வெள்ளரிக்காயைத் துண்டுகளாக்கி, அதை முகம் மற்றும் வறட்சியான பகுதிகளில் தினமும் பலமுறை தடவ வேண்டும்.

வேப்பிலை மிகச்சிறப்பான ஆன்டி-செப்டிக். அதிலும் இதை எண்ணெய் வடிவில் சருமத்துக்குப் பயன்படுத்தும்போது, சரும அரிப்பு மற்றும் எரிச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதோடு இது சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும். ஆகவே சரும வறட்சி அதிகம் இருந்தால் வேப்பிலை எண்ணெயை கை, கால்களில் தினமும் தவறாமல் தடவுங்கள்.

சரும வறட்சியைப் போக்க உதவும் மூலிகைகளில் ஒன்று கற்றாழை. கற்றாழையில் உள்ள மாய்ஸ்சுரைசிங் பண்புகள், சருமத்தில் ஈரப்பசையைத் தக்கவைக்க உதவும். வறட்சியான சருமத்தைக் கொண்டவர்கள் தினமும் கற்றாழை ஜெல்லை முகம், கை, கால்களில் தடவி ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து கழுவி வர, வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

இவற்றையெல்லாம் பின்பற்றுவதுடன், சரியான உணவு முறைகளினாலும் சரும வறட்சியைத் தடுக்கலாம். அதிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதன் மூலம் சரும செல்கள் வலிமையடைவதோடு, ஊட்டம் பெற்று, சருமம் வறட்சி அடைவது தடுக்கப்படும்.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 5 ஜன 2018