மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

இந்திய டைபாய்டு தடுப்பூசி மருந்துக்கு அங்கீகாரம்!

இந்திய  டைபாய்டு  தடுப்பூசி மருந்துக்கு அங்கீகாரம்!

உலகளாவிய பயன்பாட்டுக்காக உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு புதிய மற்றும் மிகவும் பயனுள்ள டைபாய்டு தடுப்பூசி மருந்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

2016ஆம் ஆண்டில் 12 மில்லியன் பேர் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், 1,30,000 பேர் உயிரிழந்தனர். உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். வயது வித்தியாசமின்றி தாக்கும் இந்தக் காய்ச்சலுக்கு அமெரிக்கா நிறுவனம் கண்டுபிடித்த மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்தது. தற்போது, இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் என்ற நிறுவனம் டைபாய்டு காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இதற்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்த மருந்து ஊசி வடிவில் உள்ளது. இதை 6 - 23 மாத குழந்தைகளுக்கும், 2 - 15 வயதுள்ள குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம். 2001ஆம் ஆண்டு முதல் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, தற்போது அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அனைத்து நாடுகளிலும் இந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்தலாம்.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 5 ஜன 2018