மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

மானியத்தை விட்டுக்கொடுத்த 11 லட்சம் பேர்!

மானியத்தை விட்டுக்கொடுத்த 11 லட்சம் பேர்!

கடந்த ஆண்டின் ஜூலை 22 முதல் நவம்பர் 30 வரையில், 11 லட்சத்துக்கும் மேலான மூத்த குடிமக்கள் தங்களது ரயில் கட்டணச் சலுகைகளை விட்டுக்கொடுத்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ரயில்வே துறை இணையமைச்சர் ராஜென் கோஹேன் மக்களவையில் இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், ‘இந்திய ரயில்வே துறை 60 வயது கடந்த மூத்த குடிமக்களுக்கு 50 சதவிகித கட்டணச் சலுகைகளை வழங்குவதால் ஆண்டொன்றுக்கு ரூ.1,300 கோடி கூடுதலாகச் செலவாகிறது. இந்த நிதிச் சுமையை குறைப்பதற்காக மூத்த குடிமக்களின் டிக்கெட் கட்டணச் சலுகைகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ விட்டுக்கொடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஜூலை 22 முதல் நவம்பர் 30 வரை 5.67 லட்சம் பேர் தங்களது கட்டணச் சலுகைகளை முழுமையாகவும், 5.81 லட்சம் பேர் தங்களது கட்டணச் சலுகைகளைப் பகுதியாகவும் விட்டுக்கொடுத்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 5 ஜன 2018