மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

புதிய இலக்குடன் தொலைத்தொடர்புத் துறை!

புதிய இலக்குடன் தொலைத்தொடர்புத் துறை!

தொலைத்தொடர்புத் துறையில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்து 20 எம்.பி.பி.எஸ். வேகத்தில் வயர்லஸ் நெட்வொர்க் சேவையை இந்த ஆண்டில் வழங்க டிராய் முடிவெடுத்துள்ளது.

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) 2018ஆம் ஆண்டுக்கான தொலைத்தொடர்புக் கொள்கை ஆலோசனை அறிக்கையை ஜனவரி 3ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், ‘தொலைத்தொடர்புத் துறை 2017ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி டிராய்க்கு எழுதியிருந்த கடிதத்தில் சில கொள்கைகளை 2018ஆம் ஆண்டில் தேசிய தொலைத்தொடர்பு கொள்கையில் சேர்க்கக் கோரிக்கை விடுத்திருந்தது. தற்போது இந்த ஆண்டுக்கான புதிய தேசியத் தொலைத்தொடர்புக் கொள்கைகள் வகுக்கப்பட்டு அரசு வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் முக்கிய நோக்கமே தொலைத்தொடர்புத் துறையில் ஒழுங்குமுறை மற்றும் உரிமக் கட்டமைப்புகள், தரமான சேவை வழங்குதல், எல்லோருக்கும் இணைப்பு வழங்குதல், எளிதாகத் தொழில் செய்தல், புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்குதல், 5ஜி மற்றும் இணையச் சேவையை வழங்க முனைதல் போன்றவற்றை சாத்தியப்படுத்துதலாகும். இத்துறையில் 100 பில்லியன் டாலர் வரை முதலீட்டை ஈர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இணையச் சராசரி வேகத்தை வயர்லஸ்ஸில் 20 எம்.பி.பி.எஸ் ஆகவும், வயர்லைனில் 50 எம்.பி.பி.எஸ் ஆகவும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய தொலைத்தொடர்புக் கொள்கையின் மூலம் சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்த இயலும். பங்குதாரர்கள் அவர்களுடைய கருத்தை எழுத்துபூர்வமாக ஜனவரி 19ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வெள்ளி 5 ஜன 2018