மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

இளவரசர் திருமணத்தால் உயரும் பொருளாதாரம்!

இளவரசர் திருமணத்தால் உயரும் பொருளாதாரம்!

இங்கிலாந்து இளவரசர் ஹேரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்லே திருமணத்தால் இங்கிலாந்து பொருளாதாரத்தில் ரூ.4,300 கோடிக்கும் மேல் உயரும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலிசபெத் மகாராணியின் பேரனான ஹேரி (33) மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்லே (36) ஆகியோரது திருமணம் லண்டன் ராயல் பேலஸ் வின்சர் கேசிலில் மே 19ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இத்திருமணத்தைக் காண உலகம் முழுவதிலிருந்தும் பல்வேறு பிரபலங்கள் வந்து மணத் தம்பதியினரை வாழ்த்துவர் என்பதால் இங்கிலாந்தின் சுற்றுலாத் துறை வசூலுக்குத் தயாராகியுள்ளது. கடந்த ஆண்டின் மே மாதத்தில் ஹேரியின் மூத்த சகோதரரான இளவரசர் வில்லியம் மற்றும் கேட்டி திருமணத்தைக் கண்டு ரசிக்க சுமார் 3,50,000 பார்வையாளர்கள் இங்கிலாந்துக்கு வருகை புரிந்ததாக இங்கிலாந்தின் தேசிய புள்ளியியல் துறை கூறுகிறது. இந்த ஆண்டில் ஹேரி - மேகன் திருமணத்தைக் காண வரும் கூட்டம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வியாழன் 4 ஜன 2018