மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

அப்படித்தான் பேசுவேன் -பார்வதி

அப்படித்தான் பேசுவேன் -பார்வதி

மம்முட்டியின் கசாபா திரைப்படத்தில் இடம்பெற்ற பெண்களை தாக்கிப்பேசும் வசனங்களை விமர்சித்ததால், மம்முட்டி ரசிகர்களின் டார்கெட்டாக மாறியவர் நடிகை பார்வதி. பார்வதியைத் தாக்கிப் பேசியவர்களை மம்முட்டி கண்டித்ததை வரவேற்ற பார்வதி, தொடர்ந்து வெளிப்படையாகத் தன் கருத்துகளை வெளியிட்டுவருகிறார்.

என்னைப் புரிந்துகொள்ளும்வரை நான் பேசிக்கொண்டே தான் இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

மம்முட்டி ஒரு வார்த்தை பேசியிருந்தால் சரியாகிப்போகும், பார்வதி தப்பிவிடுவார் என்று சொன்னவர்களுக்கெல்லாம், என் உதவிக்கு யாரும் தேவையில்லை என்று பதில் சொன்னார் பார்வதி. ஒரு வழியாக மம்முட்டி, “என் பக்கம் பேச யாரையும் நியமிக்கவில்லை. அனைவருக்கும் கருத்து சுதந்திரம் என்பது உண்டு. அதை நாம் மதிக்க வேண்டும்” என்று கூறி இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதுகுறித்து பார்வதி “மம்முட்டி என் விமர்சனத்தைத் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளவில்லை. அவரது பரந்த குணத்தை மதிக்கிறேன். அன்று நான் பேசியதையே இப்போது வரையிலும் சொல்கிறேன். நான் சொல்வதை மக்கள் புரிந்துகொள்ளும்வரை அப்படித்தான் பேசுவேன்” என்று கூறியிருக்கிறார்.

“நம்மைப் போன்ற நட்சத்திரங்கள் என்ன சொன்னாலும் இப்படித்தான் சர்ச்சைக்குள்ளானதாக மாற்றுவார்கள். நீ கவலைப்படாதே” என்று மம்முட்டி பிரச்சினையின் ஆரம்பத்திலேயே தன்னிடம் கூறியதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

வியாழன் 4 ஜன 2018