மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

ஸ்மார்ட் போனில் ஸ்பை!

ஸ்மார்ட் போனில் ஸ்பை!

இன்று மொபைல் போன் இல்லாதவர்களைப் பார்ப்பதே மிகவும் அரிதாகிவிட்டது. ஸ்மார்ட் போன் ஒரு அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டது. இந்தச் சூழலில் ப்ளே ஸ்டோரிலிருந்து நாம் பதிவிறக்கம் செய்து, அன்றாடம் பயன்படுத்தும் செயலிகளே நமக்கு உளவாளியாக வேலை செய்வது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

ஆம். அமெரிக்க நிறுவனம் ஒன்று சமீபத்தில் நடத்திய ஆய்வில், நமது ஸ்மார்ட் போனில் உள்ள மைக்ரோபோன் மூலம் நம்மை யாரோ கண்காணித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியாகிப் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் ஊடகம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், "சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த அல்ஃபோன்சோ என்ற நிறுவனம் ஒரு மென்பொருளை வடிவமைத்துள்ளது. அந்த மென்பொருள் நாம் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யும் செயலியுடன் இணைக்கப்பட்டு நம் போனில் ஒளிந்துகொள்கிறது. பிறகு அது போனின் மைக்ரோபோனுடன் இணைந்து ஒலி சமிக்ஞைகள் மூலம் நாம் தினசரி பார்க்கும் தொலைக்காட்சி விளம்பரங்களை நோட்டமிடுகிறது. இவை நம் உரையாடல்களை நோட்டமிடுவதில்லை. நாம் போனைப் பயன்படுத்தாமல் பாக்கெட்டுக்குள் வைத்திருக்கும்போதுகூட, பின்னணியில் இந்தச் செயலிகள் இயங்கிக்கொண்டே இருக்கும். பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் இச்செயலியின் ட்ராக்கிங்கை நிறுத்திக்கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளது.

"திரையரங்குகளில் மக்கள் பார்வையிடும் பழக்கவழக்கங்களை உளவு பார்க்கும் வகையில் அல்போன்சோ, திரைப்பட ஸ்டுடியோக்களோடு இணைந்திருக்கிறது. அதில் நிறைய பேர் தங்களது போனை ஸ்விட்ச்ஆஃப் செய்துவிடுகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே ஸ்விட்ச்ஆஃப் செய்யாமல் தங்களது பாக்கெட்டுக்குள் வைத்து விடுகின்றனர். அந்த சந்தர்ப்பங்களில், நிகழ்ச்சி அல்லது திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் மக்களிடம், அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்று எங்களால் அறியமுடியும்" என்று அல்போன்சோ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆசிஷ் சோர்தியா தெரிவித்துள்ளார்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள பெரும்பாலான செயலிகளும், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் உள்ள ஒரு சில செயலிகளும் இந்த மென்பொருளைப் பயன்படுத்துகின்றன. இவ்வகை செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும்போதே பயனர்களிடம் அவர்கள் மைக்ரோ போனை பயன்படுத்த அனுமதி (Allow) கேட்பது வழக்கம். ஆனால் பெரும்பாலானோர் இதை முழுமையாகப் படிக்காமலேயே `Allow'வை கிளிக் செய்துவிடுவர். இப்படித்தான் நம் போனுக்குள் இந்த மென்பொருள் நுழைகிறது.

நியூயார்க் டைம்ஸ் நிறுவனம், நாம் அன்றாடம் பார்க்கும் தொலைக்காட்சி விளம்பரங்களைக் கண்காணிக்க ப்ளே ஸ்டோரில் 250க்கும் மேற்பட்ட செயலிகள் இருப்பதாகக் கூறியுள்ளது. அதில் முக்கியச் செயலிகள் சில:

பூல் 3D - 500,000 - 1,000,000 பதிவிறக்கங்கள்

இது ஒரு பில்லியர்ட்ஸ் விளையாட்டு. இந்த விளையாட்டின் விளக்கப் பட்டியலில் அல்ஃபோன்ஸோ டிராக்கிங்கின் வெளிப்பாடு அடங்கியுள்ளது.

பீர்பாங்: ட்ரிக் ஷாட் - 50,000 - 100,000 பதிவிறக்கங்கள்

பிங் பாங் பந்துகளை ஒரு கோப்பைக்குள் தூக்கி எறியும் ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டின் விளக்கப் பட்டியலில் அல்ஃபோன்ஸோ டிராக்கிங்கின் வெளிப்பாடு அடங்கியுள்ளது.

ஹனி குவெஸ்ட் - 50,000 - 100,000 பதிவிறக்கங்கள்

ஹனி குவெஸ்ட் ஜம்போ, ஒரு அனிமேஷன் கரடி இடம்பெறும் ஒரு பழ வெட்டு / பழம் துப்பாக்கி விளையாட்டு. இந்த விளையாட்டின் விளக்கப் பட்டியலில் அல்ஃபோன்ஸோ டிராக்கிங்கின் வெளிப்பாடு அடங்கியுள்ளது.

ரியல் பவுலிங் ஸ்ட்ரைக் 10 பின்- 100,000 - 500,000 பதிவிறக்கங்கள்

இது ஒரு பவுலிங் விளையாட்டு. இந்த விளையாட்டின் விளக்கப் பட்டியலில் அல்ஃபோன்ஸோ டிராக்கிங்கின் வெளிப்பாடு அடங்கியுள்ளது.

கேஸினோ காயின் ரஷ் - 50,000 - 100,000 பதிவிறக்கங்கள்

நகரும் கன்வேயர் பெல்ட்டில் உள்ள பெட்டிக்குள் காயினை சேகரிக்கும் விளையாட்டாகும். இந்த விளையாட்டின் விளக்கப் பட்டியலில் அல்ஃபோன்ஸோ டிராக்கிங்கின் வெளிப்பாடு அடங்கியுள்ளது.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

வியாழன் 4 ஜன 2018