100 கோடி பரிவர்த்தனைகளைக் கண்ட டிசம்பர்!

நடந்து முடிந்த டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் 100 கோடிக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது.
2017ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் மொத்தம் 99.71 கோடி டிஜிட்டல் அல்லது மின்னணு பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் 6.05 சதவிகித உயர்வுடன் மொத்தம் 106 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.125.51 லட்சம் கோடியாகும். இதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை வரலாற்றிலேயே முதன்முறையாக 100 கோடிக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், டிசம்பர் மாதப் பரிவர்த்தனை மதிப்பானது கடந்த ஒரு ஆண்டில் ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது அதிகபட்ச பரிவர்த்தனைத் தொகையாகும். இதற்கு முன்னர் மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக ரூ.149.59 கோடி மதிப்புக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.