மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

ரஜினி-கமல் அரசியல்: ரஹ்மான் கருத்து!

ரஜினி-கமல் அரசியல்: ரஹ்மான் கருத்து!

கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்தை விட தற்போது ரஜினியின் அரசியல் பிரவேசம் தான் நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்துத் தெரிவித்திருக்க இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் கருத்து தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் திரையுலகில் அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரஹ்மான் 25 ஆண்டு காலம் தமிழக மக்கள் என்னை ஆதரித்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்டதற்கு, “திரைத்துறையில் இருப்பவர்களும் அரசியலுக்கு வரலாம். அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ள ரஜினிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று கூறினார். அதன்பின் திரைத்துறையில் இருப்பவர்கள் அரசியலை முழுமையாக கைக்கொள்ள நினைக்கிறார்களா என்றபோது, “தமிழ்நாட்டுக்கு நல்ல தலைமை வேண்டுமென்று அவர்கள் நினைக்கிறார்கள். சும்மா இருப்பவர்களால் இதை செய்யமுடியாதல்லவா” என்றார்.

தொடர்ந்து உங்கள் நண்பர் ரஜினிக்கு ஆதரவு தெரிவிப்பீர்களா எனக் கேட்டபோது “அதைப்பற்றி யோசிக்கவேண்டும். எதையும் யோசிக்காமல் செய்யக்கூடாது” என்று ரஹ்மான் கூறியபின், இசை நிகழ்ச்சியைப் பற்றி கேள்விகேட்க விழா ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், அரசியல் கேள்விகளே தொடர்ந்து வந்ததால் பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக்கொண்டு ரஹ்மான் கிளம்பினார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 4 ஜன 2018