மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

ஜல்லிக்கட்டு : புதிய கட்டுப்பாடுகள்!

ஜல்லிக்கட்டு : புதிய கட்டுப்பாடுகள்!

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2017 ஜனவரி 16 முதல் 23 வரை தன்னெழுச்சி போராட்டம் நடைபெற்றது. சென்னை மெரினாவில் மட்டும் லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெளிநாட்டில் வாழும் தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தினர். உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்த இந்தப் போராட்டத்துக்கு இறுதியாக வெற்றி கிடைத்தது. இதனால், இந்த ஆண்டு சென்னை, திருநெல்வேலி மற்றும் மலேசியா என ஜல்லிக்கட்டு விளையாட்டுகளை நடத்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதன்படி, அவனியாபுரத்தில் 14ஆம் தேதியும், பாலமேட்டில் 15ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 16ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு நடத்த விழா குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான விருப்ப மனுவை மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவிடம் நேற்று (ஜனவரி 3) கொடுத்தனர்.

ஆட்சியர் வீரராகவராவ், “ ஜல்லிக்கட்டு நடத்த சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதன்படி, மாடு பிடி வீரர்கள் காளைகள் துன்புறுத்தப்படாமல் விழாவை நடத்த வேண்டும். தகுதியான காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படும். காளைகளின் உடல் தகுதியை பரிசோதிக்க 10 கால்நடை மருத்துவக் குழுக்களும், மாடுபிடி வீரர்களுடைய உடல் தகுதியைப் பரிசோதிக்க 10 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. காளைகள் முட்டி வீரர்கள் காயமடைந்தால், அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சையளிக்கப்படும். மூன்று வயதுக்கு மேற்பட்ட காளைகள் (உயரம் 120 செ.மீ. அல்லது 4 அடி) மட்டுமே ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்படும். ஜல்லிக்கட்டில் பங்கேற்க தகுதியான காளைகளுக்கு 3 நாட்களுக்கு முன் டோக்கன் வழங்கப்படும்.வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்படும் காளைகளை வீரர்கள் முதல் 15 மீட்டர் தூரம் அல்லது 50 ச.மீ. பரப்பளவுக்குள், 30 நொடிகளுக்குள் அடக்க வேண்டும். அதுவும் 3 துள்ளல் வரை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட தொலைவுக்குள் காளைகளை பிடித்தால் மட்டுமே அவை அடக்கப்பட்டதாகக் கருதப்படும். இந்த 50 அடி தூரம் வரை 8 அடி உயரத்துக்கு இரட்டைப் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். வீரர்கள் காளைகளின் வால், கொம்புகள், கால்களை பிடிக்கக் கூடாது. காலை 8 மணிக்கு மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும். வருவாய்த்துறை தலைமையில் காவல்துறை, பொதுப்பணித் துறை, கால்நடை பராமரிப்புத்துறை அடங்கிய குழுவினர் ஜல்லிக்கட்டு விழா விதிமுறைப்படி நடத்தப்படுகிறதா என கண்காணிப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 4 ஜன 2018