மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

காலணிகளை நாக்கால் சுத்தம் செய்: வலியுறுத்திய போலீஸார்!

காலணிகளை நாக்கால் சுத்தம் செய்: வலியுறுத்திய போலீஸார்!

தமிழகத்தில் மட்டுமில்லாமல், இந்தியா முழுவதும் தலித் மக்கள் மீதான வன்முறை மற்றும் கீழ்த்தரமாக நடத்துதல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், குஜராத்தில் தலித் ஒருவரைத் தாக்கி, போலீஸ் அதிகாரிகளின் காலணிகளை நாக்கால் சுத்தம் செய்ய போலீஸார் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

குஜராத் மாநிலம் அம்ராய்வாடியைச் சேர்ந்த ஹர்ஷத் ஜாதவ் (40) தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் டிசம்பர் மாதம் 29ஆம் தேதி காவல் நிலையத்தில் கீழ்த்தரமான முறையில் நடத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து ஹர்ஷத் காவல் நிலையத்தில் எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் சாய்பாபா நகரில் டிவி பழுதுபார்க்கும் பணியைச் செய்து வருகிறேன். டிசம்பர் 29ஆம் தேதி அப்பகுதியில் இருக்கும் சாய்பாபா கோயிலில் கூட்டமாக இருந்ததால், அங்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள சென்றேன். இங்கு என்ன நடக்கிறது என ஒருவரிடம் கேள்வி கேட்டேன். நான் கேள்வி கேட்ட நபர் ஒரு கான்ஸ்டபிள் என பிறகுதான் தெரிந்தது. அதற்கு என்னை திட்டி அடித்தார். பிறகு காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று காவலில் அடைத்தனர். சிறிது நேரம் கழித்து டிஜிபி கிம்கார் சிங் வந்து, ஒரு போலீஸ்காரரை எப்படி நீ தாக்கலாம் எனக் கேட்டார். பின்பு, ‘உன் ஜாதி என்ன?’ என்று கேட்டார். அதற்குப் பின்னால் இருந்த ஒரு போலீஸ் அதிகாரி, ‘தலித்’ என்று கூறினார். தலித் என்று சொன்னதும் டிஜிபிக்குக் கோபம் அதிகரித்தது. கான்ஸ்டபிள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க சொன்னார். கான்ஸ்டபிள் காலணி மட்டுமில்லாமல் 15 போலீஸாரின் காலணிகளை நாக்கால் சுத்தம் செய்ய என்னை வலியுறுத்தினர். அதையும் நான் செய்தேன். இது பெரிய அவமானமாக இருக்கிறது. தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்தேன்” எனக் கூறினார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 4 ஜன 2018