மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

கமல் நெட் பேக் போட்டுட்டாரா? :அப்டேட் குமாரு

கமல் நெட் பேக் போட்டுட்டாரா? :அப்டேட் குமாரு

கமலு ஒரு மாசம் நெட் பேக் போட்டுட்டாரு இனிமேல் அரசியல் ஆட்டம் சூடு பிடிக்கும்னு ஆண்டவரின் சீடர்கள் பரவசநிலை அடையுறாங்க. அவங்களுக்கு ஒரு உண்மையை சொல்லணும் . இப்ப நல்ல ஆஃபர் எதுவும் இல்லையாம். நல்ல ஆஃபர் வந்த உடனே தான் நெட் பேக் போடுவாராம். அவரு தினகரனை விமர்சிச்சு டிவிட்லாம் போடல. விகடன்ல எழுதுன தொடர்ல சொல்லிருக்காரு. அதனால மகா கனம் பொருந்திய சீடர்கள் விடிய விடிய டிவிட் வருதான்னு அவர் டைம் லைன்ல உட்கார்ந்து டேட்டா வேஸ்ட் பண்ணாம மத்தவங்க ஸ்டேட்டஸ்க்கு லைக் போடாம இருந்துக்கோங்க. ஏன்னா இருபத்து நாலு மணி நேரமும் இந்த குமாரு இந்த பக்கம் தான் இருப்பான். உடனே தகவல் சொல்லுதேன். ஆனா நீங்க பில்டப் கொடுக்குற மாதிரி எல்லாம் ஆண்டவரை பார்த்ததா எனக்கு தோணல. அவரை பார்த்தா இம்சை அரசன் படத்துல ஒற்றனாக வரும் மாரிக்காளை மாதிரி தான் தெரியுது. ஏன்னா கமலும் அவரை மாதிரியே புதிய செய்தி எதாவது கொண்டு வா என்றால் இறந்து புதைத்த செய்தியை கொண்டு வருகிறார். வந்த பணம் எல்லாம் புத்தாண்டு கிறிஸ்துமஸுக்கு செலவாகி இந்நேரம் பொங்கல் செலவுக்கு ஏதாவது நடக்குமான்னு டிவியை போட்டு பிரேக்கிங் நியூஸ் வருதான்னு வாக்காள பெருங்குடி மக்கள் பார்த்துகிட்டு இருக்காங்க., இப்ப வந்து சொன்னா எதாவது ஞாபகம் இருக்குமா. பிரச்சினை இல்லாம விஸ்வரூபம் டிரெய்லரை ரிலீஸ் பண்ணுங்க டேட்டா போறதுக்குள்ள பார்த்துடுறோம் என்ன கமல் சார்.. யாராவது கமலை டேக் பண்ணிட்டு போங்களேன்..ப்ளீச்

@mufthimohamed1

லைசன்ஸ் இல்லாமலும்,ஹெல்மட் போடாமலும் வண்டில போகும்போது, வெள்ள சட்டை போட்டவங்கள பாத்தா டிராபிக் போலிஸ் மாதிரியே தெரியுராங்க,இதென்ன டிசைனோ தெரியல.

@imbhuvi5

நீங்க முதலமைச்சர் ஆயிட்டா கர்நாகடகாவுல இருந்து தண்ணி வாங்கி குடுப்பீங்களானு ஒரு பத்திரிக்கையாளர் கேட்டாரு

எனக்கு 2நிமிஷம் தலையே சுத்திருச்சு

@sultan_Twitz

ஒருத்தன் என்கிட்ட வந்து ஸ்கூல் வாடகை கொடு, ட்ராவல்ஸ் வாடகை கொடுனு கேக்கிறான்....

வாடகையா... எனக்கா.... ஒரு இரண்டு நிமிஷம் எனக்கு தலையே சுத்திடுச்சு..!!

@manipmp

வலதுகை சாப்பிடுவது

இடதுகைக்கே தெரியாமல் இருப்பது

பஃபே சிஸ்டத்தில் தான்!

@Rajayogiahgtwa1

அல்லோ

அல்லல்லோ

ஹெச்.ராஜா சார்

இன்னும் அந்த டைம்பாம் வெடிக்கல !

@Kozhiyaar

பெண்களின் 'உன் விருப்பம்' என்பது 'என் விருப்பத்திற்கு மாறாய் ஏதாவது செய்தால் மகனே நீ செத்தே' என்பதாகும்!!!

@senthilcp

ஆன்மிக அரசியலை விளக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற அறிஞர்களால் மட்டுமே முடியும் - ராமதாஸ்

ஆனா ஜாதி அரசியலை யாரும் யாருக்கும் விளக்கத்தேவை இல்லை

@senthilcp

- டாக்டர், என்"கணவருக்கு அடிக்கடி "தலை"சுத்துதாம்

- உங்க கொள்கை என்ன?னு அடிக்கடி யாராவது கேட்டிருப்பாங்க

@mekalapugazh

உழைக்காம மூனுவேளை சாப்பிடற அளவு பணம் சேர்த்துட்டாப் போதும்னு விட்டுடாதீங்க..

இன்னும் நிறைய சேர்த்துவையுங்க..

நிச்சயம் நோய்க்குச் செலவு பண்ண வேண்டிவரும்

@MJ_twets

நாம என்ன செய்தாலும் குற்றம் கண்டு பிடிப்பவரிடம் எதையும் நியாயப் படுத்த நினைப்பது வாட்சப்பில் போட்ட பார்வர்டு மெஸேஜ்யை அழிக்க நினைப்பது போல.,

@kumarfaculty

நிம்மதி எனப்படுவது நாம் ஓர் நிகழ்வுக்குத் தாமதமாகச் சென்று கொண்டிருக்கும் போது அதே நிகழ்விற்கு இன்னொருவர் நம்மை விடத் தாமதமாக வருவது...!!!

@kumarfaculty

கேம்ஸ் இல்லாத மொபைல்களை குழந்தைகள் மதிப்பதே இல்லை...!!!

@CreativeTwitz

எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதி இல்லன்னு நீங்க பாடுனப்ப புரியல தலைவா இப்ப புரியுது

@amuduarattai

ஒவ்வொரு ஆபிஸிலும், எல்லோரையும் போட்டுக் கொடுக்க,ஒரு ஆள் இருப்பான்.அவன் யாரென்று பார்த்தால்,ஸ்கூலில் படிக்கும் போது கிளாஸ் லீடரா இருந்தவனா தான் இருப்பான்.

@Akku_Twitz

கிடா வெட்டி போடனும்னு நினைக்கிறேன் என்று சொல்லி அரசியல் செய்தால் ஆன்மிக அரசியல் - SSR

மாமிசம் சாப்பிடகூடதென அரசியல் செய்தால் - RSS

RSS ன் நான்வெஜ் வெர்ஷன்தான் ரஜினியின் ஆன்மிக அரசியல் என்றறிக

@karuthu_ganesan

சோ இருந்து இருந்தால் பத்து யானை பலம் கிடைத்துருக்கும் - ரஜினி

இதையெல்லாம் பார்க்கக்கூடாதுனு தான் போய் சேர்த்துட்டாரு

@ajmalnks

'ஆன்மீக அரசியலை' விமர்சிக்க ஆக்ஸ்போர்டு பல்கழைகத்தில் பயின்ற விஞ்ஞானிகளால் மட்டுமே முடியும்- டாக்டர் ராமதாஸ்

நம்மூர் விஞ்ஞானி செல்லூர் ராஜு எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

@bommaiya

நாங்க செத்தா நீங்கதான் வந்து தூக்கிட்டு போகணும்..# பூச்சிகளுக்கும் எறும்புகளுக்குமான உலகின் மிகச்சிறந்த புரிந்துணர்வு ஒப்பந்தம்...!

@DreamofWaves

சினிமா வேலை முடிந்ததும் ‘அரசியலுக்கு வருவேன்’: கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

பல்லுபோன பிறகு பஞ்சு மிட்டாய்தான் சாப்டனும்... பக்கோடா கூடாது ஆண்டவரே..!

@SKtwtz

பதில் தெரியாதவனின் கேள்வியை விட பதில் தெரிந்தவனின் கேள்வி ஆபத்தானது...

@RoShini_MK

பென்சில் கற்றுக்கொடுப்பது ஒன்றுதான்

கூர்மையாக இரு

இல்லை என்றால்

சீவி விடுவார்கள் ..

@Thaadikkaran

முன்னெல்லாம் ஒரு விஷயத்தை புரிய வைக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிரும், இப்பெல்லாம் ஒரு வடிவேலு போட்டோ போதும்னு ஆயிருச்சு..!!

@dharmaraaaj

என் கணக்கு ஆர்.எம். வீரப்பன் ரஜினி பக்கம் சாய்வார்

தன்னால் அஸ்தமமான அவரது அரசியல் வாழ்க்கைக்கு ரஜினியின் கைமாறாக கூட இருக்கலாம்

-லாக் ஆஃப்

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 4 ஜன 2018