மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

சுற்றுலாத் துறையைப் பாதித்த ஜிஎஸ்டி!

சுற்றுலாத் துறையைப் பாதித்த ஜிஎஸ்டி!

சரக்கு மற்றும் சேவை வரியால் கேரள சுற்றுலாத் துறை மிகுந்த பாதிப்புக்குள்ளானதாகவும், விருந்தோம்பல் துறையில் ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் நிலைமை சீராகி, வருங்காலத்தில் முன்னேற்றம் இருக்கும் எனவும் கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் கடகாம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், "செப்டம்பர் மாதம் வரையில் கேரளாவுக்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட பிறகு பயணிகள் வருகையில் சரிவு ஏற்பட்டுள்ளது. அதாவது செப்டம்பர் வரையில் கேரளாவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.02 கோடியாகும். இது அதற்கு முந்தைய ஆண்டை விட 11.23 சதவிகிதம் அதிகமாகும். ஆனால் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தை எடுத்துக்கொண்டால் பயணிகள் வருகையில் தலா 9.12 % மற்றும் 5.29% வளர்ச்சி மட்டுமே ஏற்பட்டுள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 4 ஜன 2018