மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

ரஜினி கமலைத் தாக்கிய பிரேமலதா

ரஜினி கமலைத் தாக்கிய பிரேமலதா

கொள்கை என்னவென்றே தெரியாதவர் ஏன் கட்சி தொடங்க வேண்டும், ட்விட்டர் மூலம் ஆட்சி நடத்த முடியாது என்று நடிகர்கள் ரஜினி, கமலை தேமுதிக மகளிரணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கரும்பு விவசாயிகளின் நிலுவைத்தொகையை வழங்காத ஆலைகளை கண்டித்து இன்று (ஜனவரி 4) கடலூரில் தேமுதிக சார்பாக முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் தேமுதிக மகளிரணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த தலைமையில் நடைபெற்றது.

இதில் பேசிய அவர், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்காத ஆலைகளை இழுத்து மூடாதது ஏன் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தனது உரையில், "தேமுதிகவுக்கு இணை தேமுதிக தான். ரசிகர் மன்றம் தொடங்கிய காலத்திலிருந்து கேப்டனின் கோட்டை என்றாலே அது கடலூர், சேலம், விழுப்புரம், திருவண்ணாலை உள்ளிட்ட மாவட்டங்கள் தான். இன்றைக்கு கொள்கை என்ன என்று மைக்கை நீட்டும்போது பதில் சொல்ல தெரியதவர்களெல்லாம் கட்சி தொடங்குகிறார்கள்" என்று ரஜினியை விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "தேமுதிக போல களத்திற்கு வந்து போராடி மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும், தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். ஆனால் தேமுதிகவுக்கு இணை வேறெந்த கட்சியும் இல்லை. நாம் நடத்திய மக்களுக்காக மக்கள் பணி என்பது ஒரு அரசாங்கம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கு உதாரணம். கேப்டன் எப்போதுமே சொல்லுவார், இந்த கொடிகளிலும் பேனர்களிலும் கட்டப்பட்டிருப்பது கயிறு அல்ல என் தொண்டர்களின் நரம்பு என்று” என ஆர்ப்பாட்டத்தில் பேசிய பிரேமலதா பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது கமல்ஹாசனையும் விட்டுவைக்கவில்லை, "ட்விட்டர் மூலம் ஆட்சி நடத்த முடியாது" என்று நடிகர் கமலஹாசனையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் .

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வியாழன் 4 ஜன 2018