மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

ஆறுதல் வெற்றிக்காகப் போராடும் இங்கிலாந்து!

ஆறுதல் வெற்றிக்காகப் போராடும் இங்கிலாந்து!

ஆஷஸ் தொடரின் கடைசிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணி போராடிவருகிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்களைச் சேர்த்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஆஷஸ் தொடரின் கடைசி போட்டி இன்று (ஜனவரி 4) சிட்னி மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அலிஸ்டர் குக் (39) மற்றும் மார்க் ஸ்டோன்மேன் (24) குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஜேம்ஸ் வின்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் 25 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோ ரூட் மற்றும் டேவிட் மலன் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். ரூட் 83 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

அதன் பின் விக்கெட் கீப்பர் ஜானி பேரிஸ்டோ 5 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்களை சேர்த்துள்ளது. டாவிட் மலன் 55 ரன்களுடன் களத்தில் உள்ளார். இன்னும் நான்கு நாட்கள் மீதமுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சினைச் சமாளித்து கடைசிப் போட்டியிலாவது வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இங்கிலாந்து அணி விளையாடிவருகிறது.

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

வியாழன் 4 ஜன 2018