கடன் சொல்லி ஓட்டுக் கேட்டவர் தினகரன்

உலகிலேயே கடன் சொல்லி ஓட்டுக்கேட்ட ஒரே நபர் தினகரன் தான் என்றும் , 10 ஆயிரம் ரூபாய்க்காக அர்.கே.நகர் மக்கள் அவரை தேடிக்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “ஹவாலா பாணியில் கடன் சொல்லி ஓட்டுக்கேட்டவர் தினகரன். இந்தியா மட்டுமல்ல உலக சரித்திரத்திலேயே கடன் சொல்லி ஓட்டுக்கேட்ட ஒரே நபர் அவர் தான். 20 ரூபாய் நோட்டை கொடுத்து ஹவாலா முறையில் அவர் மோசடி செய்துள்ளார். 10 ஆயிரம் பணத்திற்காக தற்போது ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் அவரை தேடிக்கொண்டிருக்கின்றனர். திமுகவும் தினகரனும் ஜனநாயகத்தை சீரழித்தவர்கள்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், “நடிகர் கமலஹாசன் தனது விமர்சனத்தில் திருமங்கலம் ஃபார்முலாவை சுட்டிக்காட்டிருக்கலாம். கடன்காரராக உள்ள தினகரனை பற்றி கூறியிருக்கலாம். அவருக்கு தெரிந்ததெல்லாம் அதிமுக மட்டுமே. அவரது குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்த அவர், கருணாநிதியை ரஜினி சந்தித்தது மரபு ரீதியாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
ஆளுநர் ஆய்வு தொடர்பான கேள்விக்கு ,“ சட்டப்பேரவை கூடும்போது ஆளுநர் உரைதான் நிகழ்த்தப்படுகிறது. ஆளுநரே வேண்டாம் என கூறுகின்றீர்களா? மாநில சுயாட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம்.