மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

மும்பை செல்லும் தனுஷ் மேகா கூட்டணி!

மும்பை செல்லும் தனுஷ் மேகா கூட்டணி!

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காகப் படக்குழு மும்பைக்குச் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. பாதியில் நிறுத்தப்பட்ட இதன் படப்பிடிப்பு கடந்த டிசம்பரில் மீண்டும் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் நடைபெற்று வந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பை மும்பை மற்றும் பொள்ளாச்சியில் நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இது குறித்த தகவலைப் படக்குழு ட்விட்டரில் அறிவித்துள்ளது.

காதல் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகி வரும் இந்தப் படத்தில் ராணா, சுனைனா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். கவுதம் மேனனின் ஒன்றாக எண்டர்டெயின்ட்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். காதலர் தினத்தை ஒட்டிப் படத்தை ரிலீஸ் செய்யப் படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வியாழன் 4 ஜன 2018