மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

விசாரணை ஆணையம்: அவகாசம் நீட்டிப்பு!

விசாரணை ஆணையம்: அவகாசம் நீட்டிப்பு!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்திற்கு 6 மாதகாலம் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு இன்று (ஜனவரி 4) அரசாணை வெளியிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாகப் பல சர்ச்சைகள் எழுந்தன. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துவந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. விசாரணை ஆணையம் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டது. மூன்று மாதத்திற்குள்ளாக விசாரணையை முடிக்க வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் பல்வேறு தரப்பினருக்கு சம்மன் அனுப்பியிருந்தது. அதையடுத்து ஆணையத்தின் முன்பு திமுகவைச் சேர்ந்த மருத்துவரணி நிர்வாகி சரவணன், ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகள் தீபா மற்றும் தீபக், முன்னாள் தலைமை செயலாளர்கள் ராம்மோகன் ராவ், ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கமளித்தனர். தினகரன் தரப்பிலிருந்து அவருக்கு பதிலாக வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜராகி ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோக்கள் அடங்கிய பென் ட்ரைவைத் தாக்கல் செய்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் , கடந்த மாதம் (டிசம்பர் 25) நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் சார்பாக, விசாரணை ஆணையத்தின் காலத்தை மூன்று மாதங்கள் நீட்டிப்பு செய்யுமாறு தமிழக அரசிற்குக் கடிதம் எழுதப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்று (ஜனவரி 4) தமிழக அரசு விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை 6 மாதம் நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 4 ஜன 2018