மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

தெலுங்கில் நடனமாடும் அனிருத்

தெலுங்கில் நடனமாடும் அனிருத்

பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் வெளியாக உள்ள படம் ‘அக்னியாதவாசி’. த்ரிவிக்ரம் இயக்கும் இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிலும் இசையமைப்பாளராக அறிமுகமாவதோடு அனிருத் சிறப்பு தோற்றத்திலும் நடிக்கவுள்ளார்.

கவனம் ஈர்க்கும் இளம் இசையமைப்பாளர்களில் முக்கியமானவராக திகழும் அனிருத் தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களின் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். தற்போது தெலுங்கில் களமிறங்கியுள்ள அவருக்கு அங்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அக்னியாதவாசி படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாக, படம் இந்த மாதம் வெளிவரவுள்ளது.

அனிருத் ஏற்கனவே எதிர்நீச்சல், மான் கராத்தே, மாரி ஆகிய படங்களின் பாடல்களில் நடனமாடியிருந்தார். இந்த நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள கொடக்கா கோட்டேஸ்வர்ராவ் பாடலுக்கும் நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் த்ரிவிக்ரம் இயக்கவுள்ள படத்திலும் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வியாழன் 4 ஜன 2018